பேஸ்புக் காதல்… வீட்டில் தனியாக இருக்கிறேன் என இளைஞனை அழைத்து பெண் செய்த வேலை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகமே தன் கைக்குள் அடக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் வாளர்ந்து விட்டது. முன்பெல்லாம் எந்த தகவலாக இருந்தாலும் பரிமாற்றம் கொஞ்சம் நேரம் எடுக்க செய்யும். சொல்லப்போனால் சில நாட்கள் ஆகும்…ஆனால் இப்போதெல்லாம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்,அடுத்த நொடியிலேயே உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

அதே வேளையில் இதற்கிடையில் பல்வேறு குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.ராமநாதபுரம் இளைஞர் ஒருவர் கன்னியாகுமரி பெண் ஒருவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார்.

அந்த பெண் திருமணமானவர் என்றும், தன் கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.மேலும், தான் தனியாக வீட்டில் உள்ளதாகவும், நீங்கள் வந்தால் சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அந்த நபரை அழைத்து உள்ளார் கன்னியாகுமரியை சேர்ந்த வில்லங்க பெண். இதனை நம்பி சென்ற தனசேகர், கன்னியாகுமரி சென்று அந்த பெண்ணுக்கு கால் செய்து உள்ளார்.

சொன்னது போலவே அங்கு ஒரு நபர் வந்து, அக்கா உங்களை அழைத்து வர சொன்னார்கள் என கூறி அழைத்து சென்று உள்ளார். அதுவரை உண்மை தெரியாத அந்த நபர், பாதி வழியில் ஆள் இல்லாத இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி, அவரிடமிருந்து கத்தியை காண்பித்து மிரட்டி வங்கி கணக்கில் ரூ.83 ஆயிரத்து 500 மற்றும் செல் போன் எண் பறிமுதல் செய்து அவரை அங்கேயே விட்டு விட்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைத்தளம் மூலம் இது போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக சமீபத்கில் பேஸ்புக் மூலம் பழகி பல பேரை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் கும்பல் குறித்த தகவல் மற்றும் அவர்களிடம் திலீபன் என்ற திருவள்ளூரை சேர்ந்த நபர் 3 லட்சம் ரூபாய் வரை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*