பிரபாகரனின் படத்துடன் சென்ற நிவாரண வாகனங்களை திருப்பி அனுப்பிய பொலிசார்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

seeman

கேரளாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அடை மழை மற்றும் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் சீமான் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொருட்கள், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

வாகனங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால், நிவாரணப் பொருட்களை வழங்க சங்கனாசேரி முகாமில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அங்கு பரபரப்பு எழுந்ததை அடுத்து சீமான் மற்றும் உடன் சென்ற ‌நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

கோட்டயம் பொலிஸ் நிலையத்தில் நடந்த பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க பொலிஸார் அனுமதி வழங்கினர்.

கேரள பொலிஸாரால் விடுவிக்கப்பட்ட சீமான் அதன் பின்னர் தமிழகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit