உங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் புதன், குரு, சுக்கிரன் இருக்காங்களா? அப்போ முதல்ல இதை படிங்க

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழியே பல்லை பற்றி உள்ளது. பல்வலி பிரச்சினை இன்றைக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவை அரைத்து குடலுக்கு அனுப்பும் பணியை செய்யும் பற்கள் ஆரோக்கியமாக அழகாக இருப்பதற்கு கிரகங்களும் முக்கிய காரணம். ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் புதன், குரு, அல்லது சுக்கிரன் இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும் வரியாக அமைந்திருக்கும்.

மருத்துவத்திற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பற்களை குறிக்கும் இடம் 2ஆம் இடம் ஆகும் இவ்விடம் நன்றாக இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். ரிஷப ராசியையும் அதில் அமைந்துள்ள கிரகங்களையும் பார்ப்பது அவசியம். எந்தந்த கிரகங்கள் ஜாதகத்தில் 2வது வீட்டில் இருந்தால் பற்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

2 ஆம் சூரியன் நிற்க தீய பார்வை இல்லை எனில் பற்கள் வரிசையில் இருக்கும் ஒளி வீசும் அளவுக்கு பற்கள் நன்றாக இருக்கும் சந்திரன் நன்றாக இருந்தால் முத்து போன்று வெண்மை உடைய பற்கள், தேய்பிறை சந்திரன் எனில் பற்கள் பலமில்லாமல் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு எந்த குறைவும் இருக்காது. செவ்வாய் இருந்தால் பற்களில் ரத்த கசிவு உண்டாகும். தீய பார்வை எனில் பற்களில் பாதிப்பு இருக்கும். புதன் இருக்க பற்கள் அழகாக இருக்கும் குரு இருந்தால் பற்கள் அழகாக ஜொலிக்கும். சுக்கிரன் நிற்க பற்கள் அழகாக அமைந்திருக்கும். சனி இருக்க சொத்தை பல் இருக்கும். வயதான காலத்தில் பற்கள் சீக்கிரம் கொட்டி விடும். ராகு நின்றால் முன்னாடி நீண்ட பல் அல்லது தெத்து பல் இருக்கும். கேது நின்றால் பற்கள் இடைவெளி விட்டு இருக்கும்.

இரண்டாம் அதிபதி நல்ல வீட்டில் இருந்தால் பற்கள் நன்றாக இருக்கும். தீய கிரகங்கள் கூட்டணி இருக்க கூடாது. ஒரு நல்ல கிரகம் ஒரு தீய கிரகம் எனில் பற்கள் ஒழுங்காக இல்லை என்றாலும் ஜாதகன் சிரிப்பு நன்றாக இருக்கும். இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருந்து அதன் தசா புக்தி நடைபெறும் போது பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். தீய கிரக பார்வை 2ஆம் வீட்டில் பட்டு அதன் தசா புக்தி நடைபெறும் போது. கோள்சார ரீதியாக இரண்டாம் வீட்டில் தீய கிரகம் இருக்கும் போது, பார்வைபடும் போது பாதிக்கப்படும்.

கோள்சார ரீதியாக சனி இரண்டில் வரும்போது சொத்தை அடிக்கும், ராகு வரும்போது முன்னாடி வர ஆரம்பிக்கும், கேது வரும்போது இடைவெளி உண்டாகும், செவ்வாய் வரும்போது ரத்த கசிவு உண்டாகும். நல்ல கிரகம் வரும்போது சரி ஆக ஆரம்பிக்கும். செவ்வாயும், சனியும் பற்களுக்கான சக்தியை கொடுக்கும் கிரகங்களாக இருக்கிறது. இந்த கிரகங்கள் வலுவோடு அமையாத பலருக்கு பல் நோய்கள் மிக சகஜமாக வருகிறது.

குரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் பற்கள் சீராக இல்லாமல் இருக்கும். ரிஷப வீடு பாதிக்கபட்டு இருந்தால் பற்களில் பிரச்சனை ஏற்படும். இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது, பார்வை பட்டால் ஜாதகன் மருத்துவ மனைக்கு போய் சரி செய்து கொள்வான், கோள்சார ரீதியாக 2இல் குரு வரும் போது சரி செய்து கொள்ளலாம்.

குப்பை மேனி இலையில் சிறிது உப்பு கலந்து இரண்டு, மூன்று நாட்கள் பல் துலக்கினால் பல் வலி, பல் ஈறு வீக்கம், சொத்தைப் பல் என பல் தொடர்பான பிரச்னைகளுக்கு டாடா காட்டலாம். மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும். வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் சரிசெய்யலாம்.

செவ்வாய்க்கு, ஒன்று – ஐந்து – ஒன்பது ஆகிய இடங்களில் சனி இருந்தால் பல் நோய் கண்டிப்பாக வரும். பல் நோய் வருவதற்கு முன்பு செவ்வாய், சனி கிரகங்களை வழிபடலாம். சனிக்கிழமை காகங்களுக்கு சாதம் வைக்கலாம். ஏழை முதியவர்களுக்கு தாம்பூல தானம் வழங்க வேண்டும். குழந்தை பருவம் துவங்கி இதை செய்து வந்தால் நிச்சயம் பற்களில் பிரச்சினை வராது. சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பாதிப்பு வராது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*