வடக்கு ஆளுனர் அடிக்கல் நாட்டிய விகாரைக்கு அனுமதி மறுப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு ஆளுனரால் அடிக்கல் நாட்டப்பட்ட விகாரைக்கு பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை என சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை இருந்ததாகவும் அதனை மீள புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா என நேற்றைய தினம் புதன்கிழமை பாதகட விமலஞான தேரர் தலைமையில் நடைபெற்றது.

அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

குறித்த விகாரையானது, கடந்த 1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் அக் காணியில் அமைந்திருந்தது எனவும் , குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது.

எனவும் அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது எனவும், அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது என வடமாகாண ஆளுனர் தெரிவித்திருந்தார்.

அந்நிலையில் குறித்த விகாரை அமைந்துள்ள காணி முன்னர் பௌத்த மதகுருமாருக்கு சொந்தமான காணி எனவும் , உள்நாட்டு யுத்தம் காரணமாக பௌத்த மதகுருமார் அங்கிருந்து வெளியேறி இருந்தனர் எனவும் , பின்னர் மீள தையிட்டி பகுதியில் மக்கள் மீள குடியேற அனுமதிகப்பட்ட பின்னர் அவர்கள் தமது காணியினை அடையாளப்படுத்தி சென்று இருந்தனர் எனவும் , இந்நிலையில் குறித்த காணியினுள் விகாரை அமைப்பதற்கு வலி.வடக்கு பிரதேச சபை அனுமதி வழங்கி இருக்கவில்லை. வலி. வடக்கின் அனுமதியின்றி நேற்றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என வலி.வடக்கு பிரதேச சபை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

அந்நிகழ்வில் பெருமளவான இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தையிட்டி பகுதியானது , உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த கால பகுதியில் இருந்து இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவே இருந்து வந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*