படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இதெல்லாம் நடக்குமாம்… 8 பேர் தெரிவித்துள்ள அதிர்ச்சி நிகழ்வுகள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

real

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் பாடம் என்று கூறுவார்கள். உண்மையில் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் பல பாகங்களாக எடுக்க தகுதியான படம் என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு நபர் மீதும் அவர் உறவினர், நண்பர்கள், உடன் பணிபுரிவோர், காதலர் என பல்வேறு கண்ணோட்டம் இருக்கும். ஒருவர் பார்வையில் ஒருவர் நல்லவராக இருக்கலாம். அதே நபர் வேறொருவர் பார்வையில் கெட்டவராக தெரியலாம். சில காட்சிகள், சில சம்பவங்கள் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், அது நிஜ வாழ்விலும் நடக்கும் என்று தங்கள் சொந்த வாழ்வில் நடந்த சில அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார்கள் இந்த 8 நபர்கள்…

நானும் ஒரு ஆணும் ஐந்து வருட காலமாக காதல் உறவில் இருந்து வந்தோம். திடீரென ஒருநாள் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்தான். சென்றேன். எந்தவொரு முன் அறிவிப்போ, கலந்துரையாடலோ இன்றி.. என் கையில் அவனது திருமண அழைப்பிழை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

எனக்கு சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா செல்ல நிறைய விருப்பம் உண்டு. நிறைய நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். அப்படி ஒருமுறை நான் சுற்றுலா சென்றிருந்த சமயம். அது, ஒரு ஃபேன்சி க்ளப்பில் நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென ஒரு ஆண் என்னை நோக்கி, வந்து… ஹே பியூட்டிஃபுல்…. நான் உனக்கு ட்ரின்க் வாங்கி தரட்டுமா…” என்று கேட்டான். இதெல்லாம் படத்தில் மட்டும் தானே நடக்கும் என்று நினைத்திருந்தேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

நான் வெளிநாட்டில் படிக்க சென்றிருந்தேன். அங்கே ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அவ்வப்போது யாராவது வீட்டில் ஹவுஸ் பார்ட்டி நடத்துவார்கள். அதுதான் எனக்கு முதல் முறை… பார்ட்டியின் நடுவே ஒரு அறையை திறந்து உள்ளே செல்ல முயன்றேன்.. அங்கே சிலர் உறவுக் கொண்டிருந்தனர். அவர்கள் நான் உள்ளே நுழைந்ததை கண்டுக் கொள்ளவில்லை. நானும், எதையும் பார்க்காததை போல வெளியே வந்துவிட்டேன்.

நான் டவுன் பகுதியை சேர்ந்தவன். கல்லூரி பயில்வதற்காக தான் மெட்ரோ நகருக்கு முதன் முறையாக வந்தேன். என் கல்லூரியில் நிறைய பெண்கள் ஆங்கில படத்தில் வருவது போல மாடல் அழகிகள் மாதிரி இருந்தனர். அதுவரை அப்படியான பெண்களை நான் படத்தில் மட்டுமே கண்டிருக்கிறேன். நான் நினைத்ததை போலவே, அவர்களில் ஒருவர் கூட என்னை கண்ணெடுத்து பார்க்கவில்லை.

எனக்கு குடி பழக்கம் இருக்கிறது. ஒரு முறை பார்ட்டி சென்ற இடத்தில் மிகுதியான போதையால் என் கட்டுபாட்டை இழந்தேன். அங்கே அறிமுகமான நபருடன் அன்று கலவியில் ஈடுபட்டேன். காலையில் விடிந்து பார்த்தால்… அந்நபர் அங்கே இல்லை. ஃபேஷன் படத்தில் பிரியங்கா சோப்ராவிற்கு நேர்ந்த நிலை. என் வாழ்விலும் நடந்தது.

திடீரென என் அம்மா என் அறைக்குள் நுழைந்துவிட்டார். அப்போது நான் சுய இன்பம் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்வில் இப்படி ஒரு அசௌகரியமான நிகழ்வு நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அந்த நிகழ்வு வெறும் கனவாக இருக்க வேண்டும் என்று தினமும் நினைத்துக் கொள்கிறேன். ஆனால், அது தான் உண்மை,

ஒரு நாள் என் காதலனிடம் இருந்து அழைப்பு வந்தது, எதிர் முனையில் மிகுந்த அலறல் சத்தத்துடன் பேசினான்… என்னை எப்படியாவது வந்து காப்பாற்று… என் வீட்டுக்கு வா என்று அலறினான். என்னுள் அச்சம் தொற்றி கொண்டது. உடனடியாக அவனது வீட்டுக்கு விரைந்தேன். கதவை திறந்த போது, அவன் மண்டியிட்டு கையில் மோதிரத்துடன் காத்திருந்தான். அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.

அன்று ஆபீஸில் ஒரு மீட்டிங். மிகவும் சீரியஸாக பாஸ் பேசிக் கொண்டிருந்தார். மீட்டிங்கின் நடுவே, என்னுடன் பணிபுரியும் ஒரு நபரை அழைத்தார் என் பாஸ். அழைத்து அந்த மூன்று மந்திர வார்த்தைகளை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆம்! அவர் என் உடன் பணிபுரிந்த நபரிடம் கூறிய அந்த மூன்று வார்த்தை You Are Fired!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit