யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் கோரவிபத்து… இருவர் உடல் சிதறிப் பலி (படங்கள் இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

chava_dead_001

யாழ். சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து, இன்று இரவு ஏழு மணியளில் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

22 வயதான மார்கண்டு சுலக்சன் மற்றும் 23 வயதான மகாதேவ் சுஜீவன் ஆகிய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து ரயிலுடன் மோதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

புகையிரத கடவையில் சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில், புகையிரதம் அண்மித்த தூரத்தில் வந்த போது, அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு துண்டுகளாக உடல் பிரிந்த இளைஞரின் சடலத்தினை சாவகச்சேரி வைத்தியசாலையில் புகையிரத பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.

மற்றைய இளைஞரின் சடலத்தினை பொது மக்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

புகையிரதம், இரு சடலங்களையும் ஒப்படைத்த பின்னர் சுமார் 1 மணித்தியாலம் தாமதித்தே யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை நோக்கிப் புறப்பட்டது.

chava_dead_001 chava_dead_002 chava_dead_003

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit