நடிகர் அஜித் கேரள மக்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? விமர்சனத்திற்கு உள்ளான ரஜினி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ajith_rajini

தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகராக இருக்கும் ரஜினி கேரளாவிற்கு அளித்த நிதியுதவி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் மற்றொரு நடிகரான அஜித் கேரள மக்களுக்காக உதவி செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர்களான அஜித், விஜய் இதுவரை கேரள மக்களுக்காக எந்த ஒரு உதவியும் செய்யவில்லையே என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று விஜய் கேரள நிவாரண நிதிக்காக 70 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விஜய் அறிவித்துவிட்டார், இன்னும் அஜித் ஏன் கேரள மக்களுக்கு உதவ தயங்குகிறார். இல்லையெனில் உதவி செய்துவிட்டு அஜித் அமைதியாக இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஜித் எப்போதும் எந்த ஒரு உதவியும் விளம்பரம் இல்லாமல் செய்யும் தன்மை கொண்டவர். அந்த வகையில் கேரள மக்களுக்காக அஜித் உதவி செய்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி உறுதியான தகவல் இல்லாததால், இந்த கேள்வி எழுந்து வருகிறது.

மேலும் அஜித் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நடிகர்கள், நடிகைகள் அளித்த உதவித் தொகை குறித்தும் சில கருத்துப் பரிமாற்றங்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறது.

தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் 15 லட்சம் மட்டுமே கொடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது

ஏனெனில் ரஜினிகாந்துக்கு அடுத்து இருக்கும் நடிகர்களான கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் அவரை விட அதிகத் தொகையை நிதியுதவியாக அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit