சீமானுக்கு எதிராக பல பிரிவுகளில் வழக்குப் பதிவு

பிறப்பு : - இறப்பு :

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டமை தொடர்பாக நேற்று மதியம் சீமான் மீது தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் விதத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடுதல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில்  பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிடுதல், தவறான வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit