எக்ஸ் லவ்வரை பழிவாங்க வேணும்னா இந்த நடிகையைப் போல் பழிவாங்கணும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பழி வாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழி வாங்க வேண்டும்.

கோலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் தனது முன்னாள் காதலரை வைத்து படம் எடுத்து அது கைவிடப் பட்டதால் நொந்து போயிருந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் அந்த இயக்குனரிடம் படத்தில் நடித்தார் நடிகை.

நடிகையின் முன்னாள் காதலரை வைத்து படத்தை துவங்கி அது நின்று போனதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் இயக்குனர். அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தபோது தான் நடிகை அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி சூப்பராக ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் இயக்குனர்.

பாதிக்கப்பட்ட இயக்குனருக்கு நடிகை வாய்ப்பு அளித்தபோது முன்னாள் காதலரை பழிவாங்க தேவையில்லாத வேலையில் ஈடுபட்டுள்ளார் என்று சிலர் பேசினார்கள். நடிகையோ அதை எல்லாம் காதில் வாங்காமல் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் தில்லாக எடுத்த முடிவு அவருக்கு பலன் அளித்துள்ளது.

நடிகை துணிந்து நடித்த அந்த படம் பிரமாண்டமாக ரிலீஸாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அம்மணியின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய ஹீரோக்களுக்கு நிகரான ஓபனிங் அவருக்கு உள்ளது. நடிகரை நம்பி ஏமாந்த அந்த இயக்குனர் நடிகையால் பெரிய அங்கீகாரம் பெற்றுள்ளார். முன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் நடிகை போன்று பழிவாங்க வேண்டும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

ரீல் காதலருக்காக நடிகையின் பட ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டது. அந்த நடிகரின் படத்தை விட நடிகையின் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. ஆக, ஒரே கல்லலில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் நடிகை. நடிகையின் பட ரிலீஸ் நேரத்தில் பழைய குப்பையை அவரின் முன்னாள் காதலர் கிளறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*