விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவது குறித்த விசேட விளக்கம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

akila-viraj-kariyavasam

பாடசாலை விடுமுறைக்காலத்தில் ஆசிரியர்களின் வேதனத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு ஆயத்தமாவதாக வெளியான போலி செய்தி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்காக தீயாகங்களை செய்யும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகளும் அதிகரிக்கப்படுமே தவிர குறைப்பதற்கு தான் எந்த வகையிலும் செயல்ப்பட மாட்டேன் என ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க பணியாளர்களது வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 750 ரூபாவில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனுடன் பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபார்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit