பலத்த பாதுகாப்புடன் முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இதனையடுத்து அந்த பகுதியில் அத்துமீறி குடியேறி கடற்தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்த தென்பகுதி மீனவர்கள் ஒரு பகுதியினர் இன்றையதினம் மாலை முதல் தாமாக வெளியேறிவருகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ் மீனவர்களின் உடமைகளை எரித்தார்கள் என்ற சந்தேகத்தில் மூன்று தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்றையதினம் படகுகள் வலைகள் என்பனவற்றை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட ஆயத்தமான வேளை தமது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பதில் கூருமாறு நாயாறு மக்களால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததையடுத்து ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தென்பகுதி மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதோடு பொலிஸார் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*