தனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தேன்… கால் டாக்ஸி ட்ரைவரின் திடுக் வாக்குமூலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் பெண்களை நூதனமுறையில் ஏமாற்றி நகைகளைக் கொள்ளை அடித்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் கால் டாக்ஸி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ் குமார் பல பெண்களை ஏமாற்றி வருவதாக இரண்டு பெண்கள் பொலிசிடம் புகார் அளித்தனர்.

இதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

சுரேஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், சொந்தமாக டாக்ஸி வைத்துள்ள நான் தனியாக வேலைக்குச் செல்லும் பெண்களைத்தான் குறிவைப்பேன்.

நடந்து செல்லும் பெண்கள் அருகில் காரை நிறுத்தி தனது டாக்ஸி ஓனருக்கு இன்று பிறந்தநாள்ள். இதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சுமங்கலி பெண்களுக்குப் பட்டுப்புடவை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார் என சொல்வேன்.

அதன் பின்னர், நம்பி வரும் பெண்களை காரில் ஏற்றிச் சென்று யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி கத்திமுனையில் அவர்களை மிரட்டி நகைகளைப் பறித்துவிடுவேன்.

சில பெண்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளேன். அதன் பின்னர், பெண்களைப் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன்.

டாக்ஸியில் தனியாகப் பயணிக்கும் பெண்களிடமும் இப்படி நடந்து கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து சுரேஷ்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

taxi_001 taxi_002

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*