அடுத்த ஜனாதிபதி இவர்தான்… அடித்துச் சொல்கிறார் திகாம்பரம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thigambaram

எதிர்வரும் 2020ம் ஆண்டு தற்பொழுது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்ளே ஜனாதிபதியான பதிவி வகிப்பார் என மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இன்று (12) பூண்லோய டன்சினன் தோட்டபகுதியில் 404 இந்திய வீடமைப்பு திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

நாட்டில் பல தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை சற்று மீட்டி பார்க்கவேண்டும்.

2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின் போது மலையக மக்களுக்கு தனிவீட்டுத்திட்டத்தை அமைத்து தருவதாகவும் அவர்களுக்கான புதிய கிராமங்களை ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

இதற்கமைய இந்த டன்சினன் தோட்டமக்களுக்கு 404 வீடுகள் அமைக்கபட்டு காணி உறுதிபத்திரங்களும் வழங்கபட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit