விடுதலைப்புலி உறுப்பினர் ஜெர்மனியில் கைது… வெளியானது அதிர்ச்சி தகவல்

பிறப்பு : - இறப்பு :

Police stand in front of a building in the northeastern German city of Schwerin Tuesday, Oct. 31, 2017 after German authorities arrested a 19-year-old Syrian citizen there for allegedly planning a bomb attack with high explosives in order to kill a large number of people.  (Bernd Wuestneck/dpa via AP)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியின் Duesseldorf பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

36 வயதான இலங்கை தமிழர் ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிராக ஜெர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2008ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 இலங்கை படையினரை கட்டி வைத்து, அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தார் என்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக ஜெர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் 2006ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit