
கொழும்பு – மோதர பகுதியில் இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் தேடும் சந்தேக நபரான பூகுடி கண்ணா என்பவரின் தந்தையான கோபால் பாலசந்திரன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோதர, முத்துவெல்ல மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துளளார்.
கொல்லப்பட்டவர் 62 வயதான குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பாலசந்திரன் மற்றும் அவரது மகன் பூகுடி கண்ணா ஆகியோர் சட்டவிரோத கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், அவர்கள் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேக நபர்கள் என பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளானவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
அவரது வலது பக்க நெஞ்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.