யாழ்ப்பாணத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய 11 பேர் கைது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களின் போது, இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய், சுண்ணாகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து சுற்றிவளைப்புகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் ஊடாக வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*