வீட்டுக்குள் தோண்ட தோண்ட வெளியே வந்த சடலங்கள்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேரளாவில் ஒரு புதை குழியில் 4 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் Kannatu Krishnan (52) – Susheela (50) தம்பதியினர். இவர்களுக்கு ஆர்சா (21) என்ற மகளும், அர்ஜுன் (18) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 4 நாட்களாக குடும்பத்தில் இருந்து யாரும் பால் வாங்க வராததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் வீட்டினை திறந்து பார்த்து பொழுது, வீட்டுச்சுவர்கள் மற்றும் பால்கனி பகுதிகளில் இரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் தீவிரமாக செயல்பட்ட பொலிஸார் தோட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல் மேடு மீது ஈக்கள் மொய்ப்பதை பார்த்து சந்தேகித்து அப்பகுதியை தோண்டுமாறு உத்தரவிட்டுள்ளனர்

இதனையடுத்து உள்ளூர் மக்களின் உதவியுடன், அப்பகுதியை தோண்டும்பொழுது, 4 பேரின் உடல்களும் ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அவர்களின் உடல்களை மீட்டு ஆய்வு மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் கிருஷ்ணனின் முகம் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதும், அவரது மனைவியின் மார்பு பகுதியில் சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.

அதே சமயம் அவரது மகளின் முதுகுப்பக்கத்திலும், மகன் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

கேரளா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் அக்கம்பக்கத்தினர் பலரிடமும் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணனுக்கு பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருப்பதால் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரங்களில் பலரும் வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

kerala_001 kerala_002

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*