
பரீட்சைக்காக தனது சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை காத்தான்குடி நகரில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் இன்று (30) உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி, ஆலிம் அப்பா வீதி பகுதியில் வசித்து வந்த ஏ.பி. இன்சாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 27 ஆம் திகதி சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் சாரதி, கவனயீனமாக கதவை திறந்த போது அதில் மோதி மாணவன் வீதியில் கீழே விழுந்தான்.
பின்னர் வீதியில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மாணவன் மீது ஏறி சென்றதில் குறித்த மாணவன் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த மாணவன், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.