இங்கிலாந்தும் இந்தியாவை வீழ்த்தியது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்டீவ் ஃபின், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் வேகத்தில் மிரட்ட, இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து போனஸ் புள்ளியுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிஸ்பேனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்திய அணியில் தசைப்பிடிப்பு காரணமாக ரோஹித் ஷர்மா பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக அம்பாதி ராயுடு வாய்ப்பு பெற்றார். அஸ்வினுக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்தனுக்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணிக்குத் திரும்பினார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ரஹானே, ஷிகர் தவன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்த முறையும் ஷிகர் தவன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் ரஹானே – ராயுடு ரன் குவிக்க தடுமாறினர். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 36 ரன்களே எடுத்தது. நிதானமாக ஆடி வந்த ரஹானே 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டீவன் ஃபின் பந்தில் “மிட் ஆன்’ திசையில் இருந்த ஜேம்ஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதிலிருந்து அடுத்த வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரிசையாக பெவிலியன் திரும்பினர். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்ட, அடுத்த ஓவரில் ரெய்னா தேவையில்லாமல் இறங்கி அடிக்க முயன்று ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டைப் பறி கொடுத்தார். ஸ்டீவன் ஃபீன் வீசிய 19-ஆவது ஓவரில் அம்பாதி ராயுடுவும், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் இந்திய அணி 67 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆறாவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் தோனியும், ஸ்டூவர்ட் பின்னியும் மானம் காத்தனர். இருவரும் இணைந்து 17.1 ஓவர்கள் பேட் செய்து 70 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணி 29ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. இருவரும் ஓரளவுக்கு ஃபார்ம் ஆகி விட்டதால் முன்கூட்டியே பேட்டிங் பவர்பிளே இருக்கும் என இங்கிலாந்து வீரர்கள் எதிர்பார்த்திருப்பர். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஆட்டத்தின் 36ஆவது ஓவரில் தோனி கொடுத்த கேட்ச்சை ஆண்டர்சன் நழுவ விட்டார். அப்போது 33 ரன்கள் எடுத்திருந்த தோனி இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த தவறினார். விளைவு, அடுத்த ஓவரில் ஃபின் தனது பணியை கச்சிதமாக நிறைவேற்ற, தோனி பெவிலியன் திரும்ப வேண்டியதாயிற்று.

“ஆல் ரவுண்டர்’ அக்ஷர் படேலை வீழ்த்த ஸ்டீவன் ஃபின்னுக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. சந்தித்த முதல் பந்திலேயே படேலை கிளீன் போல்டாக்கினார் ஃபின். கையோடு அவர் ஹாட்ரிக் வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நல்ல வேளையாக அதற்கு புவனேஷ்வர் குமார் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால், முன்னணி பேட்ஸ்மேன்களே திணறியபோது புவனேஷ்வர் குமார் மட்டும் என்ன செய்வார் பாவம், ஆண்டர்சன் பந்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார்.

இதற்கிடையே ஃபின் பந்தை சிக்ஸருக்குப் பறக்க விட்ட ஸ்டூவர்ட் பின்னி, அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, முகமது ஷமி தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் அற்புதமாக கேட்ச் செய்தார் மொயீன் அலி.

முடிவில் இந்திய அணி 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 5, ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இடைவேளைக்கு முன்னதாகவே இங்கிலாந்து களமிறங்கியது. இந்திய பேட்ஸ்மேன்கள் போல அல்லாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறவில்லை. இதனால், 27.3 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் மொயீன் அலியின் விக்கெட்டை மட்டுமே இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த இயான்பெல், ஜேம்ஸ் டெய்லர் இருவரும் இணைந்து 131 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றி பெறச் செய்தனர். இயான் பெல் 88 ரன்களுடனும், ஜேம்ஸ் டெய்லர் 56 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஸ்டீவன் ஃபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி 22 ஓவர்களை மீதம் வைத்து வெற்றி பெற்றதால் அந்த அணிக்கு போனஸ் (1) புள்ளி கிடைத்தது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் சிறந்த தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். அதற்காக எப்போதுமே தொடக்க வீரர்கள்தான் சிறப்பாக ஆட வேண்டும் என்றில்லை. தொடக்க ஜோடி விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்குபவர்கள் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 ஓவர்கள் வரையிலாவது அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால்தான், அதிக ரன்களைக் குவிக்க முடியும்.

நாங்கள் சிறப்பாக ஆடாதபோது பல விமர்சனங்கள எழும். இதுவும் ஆட்டத்தின் ஒரு அங்கமே. இதே பேட்டிங் வரிசைதான் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இங்கிலாந்து அணியை இங்கிலாந்தில் வீழ்த்தியது என்பதையும் மறந்து விடக் கூடாது.

தோனி, இந்திய கேப்டன்.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரஹானே (சி) டெய்லர் (பி) ஃபின் 33 40

ஷிகர் தவன் (சி) பட்லர் (பி) ஆண்டர்சன் 1 5

அம்பாதி ராயுடு (சி) பட்லர் (பி) ஃபின் 23 53

விராட் கோலி (சி) பட்லர் (பி) ஃபின் 4 8

சுரேஷ் ரெய்னா (எஸ்டி) பட்லர் (பி) மொயீன் அலி 1 3

எம்எஸ் தோனி (சி) பட்லர் (பி) ஃபின் 34 61

ஸ்டூவர்ட் பின்னி (சி) மோர்கன் (பி) ஆண்டர்சன் 44 55

அக்ஷர் படேல் (பி) ஃபின் 0 1

புவனேஷ்வர் குமார் (பி) ஆண்டர்சன் 5 5

முகமது ஷமி (சி) மொயீன் அலி (பி) ஆண்டர்சன் 1 7

உமேஷ் யாதவ் நாட் அவுட் 0 0

மொத்தம் (39.3 ஓவர்கள், ஆல் அவுட்) 153

பந்து வீச்சு

ஆண்டர்சன் 8.3-2-18-4

வோக்ஸ் 7-0-35-0

ஸ்டூவர்ட் பிராட் 7-0-33-0

ஃபின் 8-0-33-5

மொயீன் அலி 9-0-31-1

ஷிகர் தவனை ஃபார்முக்கு கொண்டுவர இந்தியா படாத பாடுபடுகிறது. ஆனால், அதற்கான நேரம்தான் இன்னும் கூட வரவில்லை.

ஹர்ஷா போக்லே, கிரிக்கெட் விமர்சகர்/ வர்ணனையாளர்.

இங்கிலாந்து

இயான் பெல் நாட் அவுட் 88 91

மொயீன் அலி (சி) கோலி (பி) பின்னி 8 12

ஜேம்ஸ் டெய்லர் நாட் அவுட் 56 63

மொத்தம் (1 விக்கெட், 27.3 ஓவர்கள்) 156

பந்து வீச்சு

பின்னி 7-0-34-1

புவனேஷ்வர் 2-0-18-0

உமேஷ் 6-0-42-0

முகமது ஷமி 4-0-23-0

அக்ஷர் 7.3-0-32-0

ரெய்னா 1-0-7-0

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*