மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம்… கலைஞரின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Kalaignar-Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி திடீர் சுகயீனம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் பெரும் பரபரப்பு நிலையை அடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதையடுத்து, சென்னையில் அமைந்துள்ள அண்ணா சமாதி சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ராஜாஜி மண்டபத்திலும் மின் விளக்குகள் சரிசெய்யப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதனிடையே, தமிழகம் முழுவதும் பொலிஸார் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், விடுமுறையில் சென்றவர்கள் உடன் பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து வாய் மொழி உத்தரவு மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அதிகாரப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit