வாகன விபத்தில் சிக்கி இருவர் பலி

பிறப்பு : - இறப்பு :

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வாகன விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் – மெதவச்சி வீதி ஹதருஸ்வல பிரதேசத்தில் நேற்றைய தினம் உந்துருளி , முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த நபர் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

26 வயதுடைய பதவிய பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் பண்டாநாகாரய அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது பாரவூர்தி மோதுண்டதில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit