கூட்டமைப்பே தமிழர்களுக்கு தடையாக இருப்பதாக கோத்தபாய குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யுத்த நிறைவுக்குப் பின்னர், தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பல விடயங்களுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் வடமாகாண சபையும் தடையாக இருந்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் நேற்று மாலை கொழும்பில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான அவசியம் இருந்தது.

இதன்பொருட்டு அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை.

முன்னாள் பாதுகாப்பு படைத் தளபதி உதயபெராராவின் ஊடாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கான முயற்சி தம்மால் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை 2.30க்கு சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பதற்கான காலம் குறிக்கப்பட்டிருந்தாலும், அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு அந்த சந்திப்பை அவர் ரத்து செய்துவிட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இந்த சந்திப்பை ரத்து செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரப் பகிர்வை வழங்குவதால் எந்த பயனும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தனித்து வடமாகாணத்துக்கு மாத்திரம் காவற்துறை அதிகாரத்தை வழங்கமுடியாது என்ற நிலையில் காவற்துறை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது காவற்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

காவற்துறை அலுவலர்களின் செயற்திறன், ஆயுதத்தெரிவு, கட்டளை – பணிதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசத்தெரியாத காவற்துறை அதிகாரிகள் இருப்பது அங்குள்ள மக்களுக்கு சிரமானது என்ற அடிப்படையிலேயே காவற்துறை அதிகாரத்தை வழங்குமாறு கோரப்படுகிறது.

இதற்கு காவற்துறை அதிகாரத்தை பகிர்வதற்கு பதிலாக, தமிழ்மொழி தெரிந்த காவற்துறை அலுவலர்களை இணைத்துக் கொண்டு இந்த பிரச்சினையைத் தீர்க்கலாம்.

ஆனால் காவற்துறையிலோ இராணுவத்திலோ தமிழ் இளைஞர்கள் இணைவதை தமிழ் தேசிய கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சரும் தடுக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, வடக்கில் இயங்கிய சகல துணை இராணுவக் குழுக்களும் தங்களது ஆயுதங்களை கலைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தாவும், புளொட் தலைவர் சித்தார்த்தனும் தம்மை சந்தித்து அதிருப்தியை வெளியிட்டதாகவும், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*