குருவின் பார்வையால் இன்று பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

astrology_new

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்:

குல தெய்வத்தை வழிபடுவதற்கான பயணங்களை மேற்கொள்வீர்குள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு முயற்சிகள் கைகூடி வரும். பணிபுரிகின்ற இடத்தில் உங்கள் மீது இருந்த நம்பிக்கை இன்னும்பல மடங்கு உயர ஆரம்பிக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்:

புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் சுப விரயச் செலவுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் உங்கள் பக்கம் இருக்கும். சக ஊழியர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகலாம். எதிர்காலத் திட்டத்துக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களுடைய செயல்பாட்டினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் வழி சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வேலை தேடுகிறவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். மனதுக்குள் இருக்கும் கவலைகள் குறைந்து மனம் மகிழ்வோடு காணப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்:

முன்பின் தெரியாத புதிய நபர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தாயினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கூட்டாக தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களுடைய உதவியினால் சுப விரயச் செலவு செய்வீர்கள். ஆனால் அது தொழில் அபிவிருத்தியாக மாறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எணண்ாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்:

எந்த காரியமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் தைரியத்தின் மூலம் லாபமும் அடைவீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் புகழ் பெறுவீர்கள். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்குவீர்கள். வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவினால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி:

செப்டம்பர் வீட்டில் குழந்தைகளின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். போட்டிகளில் வெற்றிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்குப் பணவரவுகள் வந்து சேரும். உங்களுடைய நிர்வாகத் திறமையால் வெற்றியை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். குழந்தைகள் மூலமாக சிறுசிறு சுப விரயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணான எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் இருக்கும்.

துலாம்:

பயணங்களின் மூலமாக உங்களுடைய தொழிலில் லாபம் உண்டாகும். சுய தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பொன், பொருள் ஆகியவற்றைக் கையாளுகி்ன்ற போது கவனமாக இருங்கள். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்:

நண்பர்களுடன் சுற்றுலாக்கள் சென்று கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டினை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இழந்த பொருள்களை மீட்பதற்கான எல்லா முயுற்சிகளையும் மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளின் அளவு குறைந்து உறவுகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

தனுசு:

வீட்டுக்கு நீண்ட நாள் கழித்து உறவினர்களின் வருகையால் மகம் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். புதிய விவரம் தெரியாத நபர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மகரம்:

புனித யாத்திரைகள் செல்வதற்கான எல்லா முயுற்சிகளையும் செய்வீர்கள். பரம்பரை சொத்துக்களில் சுப விரயங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தியுாகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய வேலையில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்:

பொது நல காரியங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மற்றவர்களிடத்தில் புகழ் ஏற்படும். உயர்ந்த உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வான் வழி பயணங்களின் மூலமாக தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்துவிட்டு, கொஞ்சம் அமைதியுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மீனம்:

அரசாங்கத் தரப்பில் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் அத்தனையும் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்கின்றவர்கள் உங்களுடைய புதிய முயற்சிகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் வெள்ளை நிறமும் இருக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit