என் இறுதி முடிவு இதுதான்… இதை தவிர வேறு வழி தெரியவில்லை… கதறி அழுத ஸ்ரீரெட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் சித்தரிப்பதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டதாக குற்றம்சாட்டினார். இதற்கான ஆதாரங்களையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியது. பாரதி ராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடனேயே அனைத்தும் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

பணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி இவ்வாறு நடந்துகொள்வதாக அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில் மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக இருந்தது.

ஆனால் நான் இன்று தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி நிற்கிறேன். என் பெற்றோர் கூட எனக்கு ஆதரவாக இல்லை.

என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் பார்க்கின்றனர். இதனால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தோன்றுகிறது.

எனக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் நான் என்னையே அழித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என ஸ்ரீ ரெட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*