மகளுக்கு போதை மாத்திரைகள் கொடுத்து தந்தை செய்த அசிங்கம்… இலங்கையில் இப்படியொரு சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து தந்தையின் கள்ளக்காதலை கண்டுபிடித்த அம்மா…..!

எனது தோழியின் அம்மாவுடன் அப்பா கதைப்பார்…

டை பட்டியால் எனது கண்களை கட்டிவிடுவார்..

என்தோழியின் அம்மாவை அப்பா மடியில் அமர வைத்துக்கொள்வார்.

ஏதோ குளிசைகளை குடிக்குமாறு தருவார்… கண் திறக்கும் போது நான் வீட்டில் இருப்பேன்… அம்மாவிடம் உண்மைகளை கூறிய 7 வயது மகள்.

கேகாலை பகுதியில் கள்ளக்காதலியுடன் ஆபாசமாக நடந்துக்கொள்வதற்காக தனது 7 வயது மகளுக்கு போதை மாத்திரைகளை பருகச் செய்த தந்தையை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேகாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் வீனா என்ற சிறுமியை அவரது தந்தை அவருடைய வாகனத்தில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.

இந்நிலையில் குறித்த வீனாவின் வகுப்பில் கற்கும் பிரிதொரு சிறுமியான அகல்யாவை அவரின் தாயார் பாடசாலைக்கு அழைத்து வந்து விட்டுச்செல்வார்.

இந்நிலையில், வீனாவின் தந்தைக்கும் அகல்யாவின் தாய்க்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

சிறிது காலம் சென்றதும் இருவரின் உறவும் மேலும் பலமானதை தொடர்ந்து வீனாவின் தந்தை அவரின் வாகனத்திலேயே அனைத்து அந்தரங்கத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

வீனாவின் பாடசாலை விட்டு அழைத்து வருவதாக கூறிவிட்டு வரும் வீனாவின் தந்தை அகல்யாவின் அம்மாவுடன் உல்லாசமாக இருப்பதற்கு வீனா தடையாக காணப்பட்டுள்ளார்.

ஆகையினல் வீனா அணியும் டை பட்டியினை கொண்டு கண்களை கட்டி விட்டு வீனாவின் தந்தை அகல்யாவின் தாயுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

வீனாவின் கண்கள் கட்டப்பட்டிருந்த போதிலும் சிறிய துளையில் தந்தையில் அனைத்து அந்தரங்கத்தினை வீனா பார்த்துள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமை போன்று கண்டுகொள்ளவில்லை.

வழக்கமாக நடைபெறும் இந்த செயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

வீனாவின் கண்களை கட்டிவிட்டு போதை குளிசைகளை பருகச்செய்துள்ளார்.

மயக்கமுற்ற வீனா சில மணித்தியாலங்களின் பின்னரே விழித்துள்ளார்.

நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லகூடாது என வீனாவின் தந்தை வீனாவிடம் கேட்டுக்கொண்டதோடு அச்சுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வீனாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும் வீனாவின் அம்மாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வீனா விரும்பி உண்ணும் ஒருவகை பிஸ்கட் பைக்கற்றுக்களை வாங்கி கொடுத்து எதுவானாலும் மறைக்காமல் சொல்லுமாறு கேட்டுள்ளார்.

இதன்போது ஒன்றுமில்லை அம்மா என தெரிவித்த வீனா தனக்கு அதிகமாக பிஸ்கட்டுக்கள் வாங்கிகொடுத்தால் தான் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே மேலும் பல இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்த வீனாவின் தாய் நடந்த அனைத்து விடங்களையும் மகளிடம் கேட்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் வீனாவின் தாய் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து அவரின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

ஆனால் அகல்யாவின் தாய் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள வீனாவின் தந்தையை தேடி காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*