புகையிரதப் பாதையில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

train

மன்னார் தொடரூந்து வீதியின் முருங்கன் பிரதேசத்தில் இருந்து தொடரூந்தில் மோதி உயிரிழந்த நிலையில் இளைஞரொருவரின் சடலமொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் நேற்று இரவு தொடரூந்தில் மோதி இவ்வாறு உயிரிழந்திருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மரணம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் , இளைஞர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மன்னார் பதில் நீதவான் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த நபர் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ள கிராமமொன்றை சேர்ந்தவர் எனவும் , அவரின் உறவினர்கள் முருங்கன் மருத்துவமனைக்கு வருகை தந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முருங்கன் காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit