தென்னாபிரிக்காவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இலங்கை

பிறப்பு : - இறப்பு :

Cricket - Sri Lanka v South Africa -Second Test Match - Colombo, Sri Lanka - July 21, 2018 - Sri Lanka's Akila Dananjaya celebrates with his teammates after taking the wicket of South Africa's Dale Steyn (not pictured). REUTERS/Dinuka Liyanawatte

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸட் போட்டியின் தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 490 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதன்படி இன்று காலை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் மூன்றாம் நாள் அட்டத்தை 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி இன்றைய தினம் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லுங்கி நிட்ஜிவினுடைய பந்து வீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தய அஞ்சலோ மெத்தியூஸ் 71 ஓட்டங்களுடன் மஹாராஜினுடைய பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி மொத்தமாக 81 ஓவர்களை எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்க‍ளையும் லுங்கி நிட்ஜி ஒன்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 42 ஒட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit