பாம்பின் விஷத்தை போதைப் பொருளாக உட்கொள்ளும் தமிழர்கள்… திடுக்கிடும் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாம்பு விஷத்தை போதையாக்கும் பழக்கம் தமிழகத்திலும் தொற்றி கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா, ஹெராயின், அபின் போன்ற போதை வஸ்துகளை விட பாம்பு விஷம் அதிக போதை தருவதாலேயே இளைஞர்கள் இதை நாடுவதாக கூறப்படுகிறது.

டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் இரவு பார்ட்டியில் மட்டும் அரங்கேறி வந்த இந்த கொடிய கலாச்சாரம் தற்போது தமிழகத்தையும் தொற்றி கொண்டுள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஆன்மீக ஆய்வுக்கு தமிழகம் வந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் பாம்பு கடி போதை விஷ விவகாரம் பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பாம்பை நேரடியாக நாக்கில் கொத்த வைத்து விஷத்தை ஏற்றி கொள்ளும் இளைஞர்கள், பாம்பு விஷத்திலிருந்து தயாரிக்கப்படும் பவுடரையும் பயன்படுத்துகிறார்கள்.

குளிர்பானம் அல்லது மதுவில் பாம்பு விஷத்தை கலந்து குடித்தால் குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் அதிகபட்சம் ஒரு வாரம் வரை போதையில் மிதக்க முடியுமாம்.

இதன் விலை சாதாரண போதை வஸ்துகளை விட மிக அதிகமாம்.

அதிலும் நாகபாம்பு விஷ பவுடருக்கு தான் அதிக கிராக்கி. உடல் திறன் அற்றவர்கள் இதை பயன்படுத்தினால் உடனடியாக மரணம் நிச்சயமாம்.

தமிழகத்தில் 242 பாம்புகள் இருந்தாலும் அதில் 4 வகை பாம்புகள் தான் அதிக விஷத்தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*