இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இராணுவத் தளபதி இணக்கம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

army

தோப்பூர், கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவதற்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன் போது தோப்பூர் கல்லம்பத்தை கிராமத்தில் அமைந்திருக்கும் பத்து வீட்டுத்திட்ட இராணுவ முகாமை அகற்றுவது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் குறித்த இராணுவ முகாமை மிக விரைவில் அகற்றுவதற்கு இராணுவத் தளபதி சம்மதம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் அவர்களுடைய இராணுவ முகாமை அமைப்பதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவ தளபதி இதன்போது தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் கல்லம்பத்தை கிராம மக்களிடம் அவர்களுக்குச் சொந்தமான காணியும் வீடுகளும் கையளிக்கப்படும் எனவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit