காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சம்பந்தன் காட்டம்

பிறப்பு : - இறப்பு :

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு நிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என இரா.சம்பந்தன் பெல்ஜியம் இலங்கை நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பெல்ஜியம் இலங்கை நாடாளுமன்ற நட்புறவு குழுவினருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் விடயம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை மக்கள் பல மாதங்களாக இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறனர்.

இது குறித்து அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வகையில் இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit