பேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன்? 66 வயது தாத்தாவின் திடுக் வாக்குமூலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் கைதான முதியவர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 17 பேரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கூறிய ஒரே பெயர் ரவிக்குமார் (66)

இதையடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக லிப்ட் ஆப்ரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார் எல்லோரிடமும் மரியாதையாகப் பழகுவார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார்.

மாணவியிடம் அத்துமீறிய தொடங்கிய அவர் மிரட்டியும் வந்துள்ளார்.

இந்நிலையில் போதையில் அங்கு பணியாற்றும் சில நண்பர்களிடம் இதுகுறித்து ரவிக்குமார் தெரிவிக்க அவர்களும், மாணவியிடம் அத்துமீறத் தொடங்கியுள்ளனர்.

அப்போது தான் மயக்க ஊசி, கூல்டீரிங்ஸில் மயக்க மருந்து என்று மாணவிக்குக் கொடுத்து சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையில் ரவிக்குமார் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், மாணவியிடம் தவறாக நடந்தது நான் மட்டுமல்ல இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் திரைமறைவில் இருக்கின்றனர். நான் ஒரு கருவிதான் என கூறியுள்ளார்.

அவர் குறிப்பிட்டபடி, மாணவி விவகாரத்தில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை பொலிசார் ரகசியமாகச் சேகரித்து வருகின்றனர்.

ரவிக்குமாரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவி விவகாரத்தில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம். அடுக்குமாடியிலிருந்து கிடைத்த ஆதாரங்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ள நிலையில் ஆய்வின் முடிவு வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாணவி மற்றும் கைதானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அந்த முடிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை 17 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*