கணவனின் முதல் திருமணத்தைக் கண்டுபிடித்த மனைவி… இளம்பெண் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த 13-ஆம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மாயங்குக்கு ஏற்கனவே திருமணமானதை பத்ரா, தான் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் தெரிந்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 2016-ல் இருவருக்கும் திருமணம் ஆனது. ஆனால் கடந்த மாதம் தான் மாயங்க் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என பத்ராவுக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுவரை மாயங்க் மற்றும் அவர் குடும்பத்தார் கைது செய்யப்படாத நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்துவோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*