பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. குறிப்பாக இவர் நடித்த வம்சம் டிவி சீரியலில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தவர்.

வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரியங்காவுக்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் பிரியங்கா. அவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.

குடும்பத் தகராறு காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. பல்வேறு நடிகர்கள், நடிகைகள், குறிப்பாக டிவி தொடர்களில் நடித்து வந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

முன்பு ஷோபனா, சாய் பிரஷாந்த் என பல கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. தொடர்ந்து அதிகரித்து வரும் தற்கொலைகளால் திரையுலகமும், சின்னத்திரை உலகமும் கவலை அடைந்துள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*