துப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

இந்திய மாநிலம் பிஹாரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் சமஷ்டிபூர் கிராமத்தில் இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் துர்கேஷ் சரண் (30).

ஓராண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற அவர் பிரியங்கா குமாரி (23) என்ற பெண்ணை தற்செயலாக சந்தித்துள்ளார்.

அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒராண்டாக இருவரும் காதலித்துள்ளனர்.

சமீபகாலமாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு. சரணை குறித்த பெண் வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் பிரியங்கா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற விவரம் சரணுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பிரியங்காவை சந்திப்பதை இளைஞர் தவிர்த்து வந்துள்ளார். மேலும் சரணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தனது உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர் பெண் வீட்டார் ஆலோசனை செய்து குறித்த இளைஞரை கடத்தி வந்து, தங்கள் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் சரண், பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேறு ஒரு வாகனத்தில் வந்த பிரியங்காவின் குடும்பத்தினர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டினர்.

பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை கடத்திச் சென்று வீடு ஒன்றில் அடைத்து வைத்தனர்.

அதற்குள் நடந்த விவரம் சரணின் பெற்றோருக்கு தெரிய வரவே, பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பொலிசார் விரைந்து செயல்பட்டு குறித்த இளைஞரை மீட்டனர். மேலும் புகாரின் பேரில் பிரியங்காவின் உறவினர்கள் 5 பேரை ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit