உங்களுக்கு குபேரன் கோடி கோடியாக கொட்டி கொடுக்கணுமா? இந்த 3 மந்திரத்தை தினமும் சொல்லுங்க

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kuberan

இந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன. இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று தொட்டு இந்த பழக்கம் இருந்து வருகிறது.

இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம். அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.

லட்சுமி குபேர மந்திரம் 1

ஓம் ஸ்ரீ மகாலட்சுமி ச வித்மஹே விஷ்ணுபத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்.

பொருள் :

ஸ்ரீ விஷ்ணுவின் மனைவியான மா மஹாலட்சுமியை நினைத்து வழிபடுகிறேன். அவரை வாழ்த்துகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள்பாவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்.

குறிப்பு :

இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஓதி வந்தால் விரைவிலேயே உங்கள் ஆசைகள் ஈடேறும்.

லட்சுமி குபேர மந்திரம் 2

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் இங் சாங் ஓம்
ஹ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய நமஹ! சகல ஹ்ரீம் சகல ஹ்ரீம் சாங் எங் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீ ஓம்

பொருள்

இது லட்சுமி பீஜா மந்திரம். இந்த மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தால் லட்சுமியின் திருவருள் கிட்டும்.

குறிப்பு

இந்த மந்திரமானது அஷ்ட லட்சுமிகளான 10 பேரையும் துதிக்கின்ற சக்தி வாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது லட்சுமி, சரஸ்வதி, காளி போன்ற பத்து அவதாரங்களையும் வணங்குகின்ற பலன் கிடைக்கும்.

லட்சுமி குபேர மந்திரம் 3

ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் குபேர லக்ஷ்மி கமல
தேவனாய தான கருஷினியே ஸ்வாஹா

பொருள்

அன்பான லட்சுமி குபேர கடவுளே நான் உங்களை நோக்கி வணங்குகிறேன், வழிபடுகிறேன். எனக்கு செல்வத்தையும் வளத்தையும் கொடுத்து ஆசிர்வதியுங்கள்.

குறிப்பு

இந்த பீஜா மந்திரம் உங்களுக்கு உடனடியான பலனை கொடுக்கக் கூடியது. இதை நீங்கள் தினந்தோறும் துதிக்கலாம். குபேரின் ஆசியையும் அருளையும் பெறலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit