பட வாய்ப்புக்காக ஹீரோவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்… கன்னத்தில் பளார் விட்ட நடிகர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பட வாய்ப்புக்காக தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் நவஜித் நாராயணன் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்களையும் படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. மஞ்சு வாரியரின் ஆமி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள நவஜித் நாராயணன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

ஒரு இயக்குனர் மற்றும் அவரின் குடும்பத்தாரை எனக்கு 3, 4 ஆண்டுகளாக தெரியும். நான் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வாழ்க்கை, வேலை என்று பலவற்றை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் யாரும் இல்லாததால் டீ போட ஆள் இல்லை என்று கூறி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றார். திரும்பி வந்தவர் என் அருகில் வந்து அமர்ந்தார்.

நான் உனக்கு என் படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன். ஆனால் அதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது அவரின் கை என் ஆணுறுப்பை தொட்டது. எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு தேவையில்லை, கையை எடுங்கள் என்றேன். ஆனால் அவர் கேட்காததால் அவரை பிடித்து தள்ளினேன் அதில் அவர் கிட்டத்தட்ட கீழே விழுந்தார். அதன் பிறகு அவருக்கு இரண்டு அறை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.

நீண்ட நாள் பழக்கமான ஒருவர் இப்படி தகாத முறையில் நடந்தபோது அதை புகைப்படமோ, வீடியோவோ எடுக்கும் மனநிலை இருக்காது. அவர் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்னிடம் ஆதாரம் இல்லை. அவரின் மனைவி மிகவும் அன்பானவர். அவருக்கு தனது கணவர் இப்படிப்பட்டவர் என்று தெரிய வந்தால் எடுக்கக் கூடாத முடிவை எடுத்துவிடுவாரோ என்று பயந்து அந்த இயக்குனரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

சினிமா துறையில் பட வாய்ப்பு பெற பெண்கள் மட்டும் அல்ல ஆண்களையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். எனக்கு நடந்த சம்பவம் பற்றி நான் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இல்லை. நான் அந்த போஸ்ட் போட்ட பிறகு வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் என்னை ஃபேஸ்புக் மெசஞ்சரில் தொடர்பு கொண்டு தங்களுக்கும் அப்படி நடந்ததாக தெரிவித்தனர்.

ஒருவரை கட்டாயப்படுத்தி படுக்கைக்கு வரவழைக்கக் கூடாது. படுக்கைக்கு செல்வதால் பட வாய்ப்பு கிடைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது. அப்படி ஊக்குவித்தால் திறமைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*