
கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து குடும்பத்தலைவருடன் பொலிசாரிடம் சிக்கினார். அவரை ஏமாற்றி அழைத்துச் சென்ற திருமணமான ஆசாமி ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த யுவதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே மீட்கப்பட்டவராவார்.
காதலிப்பதாக ஏமாற்றி குடும்பத்தலைவர் ஒருவரால் அந்த யுவதி வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீட்டுக்குள் அவர்கள் கள்ளத் தொடர்பில் இரு்பபதாக குடும்பத்தலைவரின் மனைவியால் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.
தன்னை குடும்பத்தலைவர் தகாத முறையில் நடாத்தியதாகவும் வேறு இருவரும் தன்னை தகாத முறையில் நடத்த முற்பட்டனர் என்றும் யுவதி பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யுவதி மருத்துவ பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு ஆரம்ப மருத்துவ சோதனையின் பின் பெண் நோயியல் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் தொடர்ந்தும் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.