கும்பத்திற்கு புதிய வேலை கிடைக்கும்… 12 ராசிகளுக்குமான ஆடி தமிழ் மாத ராசிபலன்கள்

பிறப்பு : - இறப்பு :

astrology_new

மேஷம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும், வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும், சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் தொல்லை உருவாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடம் மாற்றம் உண்டாகும், அடிக்கடி பக்கத்து ஊருக்கு பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைக்கும், குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், மனதில் குதுகலம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள், கௌரவம் பாதிக்கப்படும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும், ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும்.. செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், திடீர் என்று பணம் கிடைக்கும்.. உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் கிடைக்காமல் பாக்கி இருந்த பணம் வசூலாகும், சமயோசிதமாக பேசி காரியம் சாதித்துக் கொள்வீர்கள்.. குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், செல்வ நிலை சிறப்படையும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும், தொழிலுக்காக அடிக்கடி பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும்.. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கடகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்ப்பவர்கள் நிலை முன்னேற்றமடையும், உறவினர்களினால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும், புத்திக் கூர்மை அதிகர்க்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.. சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் வீடு மாற்றம் செய்யும் நிலை ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், கடன் வாங்கும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும். . கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் தகராறு உண்டாகும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் மின்சார சாதனங்களை கையாளும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும், சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைத் தரும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அக்கம்பக்கத்தாரால் நன்மை உண்டாகும், மனதில் சந்தோஷம் உண்டாகும்.. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் பண வரவு கணிசமாக இருக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் கவனம் அதிகரிக்கும், பரம்பரை விவசாய நிலம் கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தூக்கம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், மூத்த சகோதரருடன் சச்சரவு உண்டாகும்.. செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பவை எல்லாம் தடையில்லாமல் நடக்கும், தரகு கமிஷன் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும்.. சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பு மந்தமாகும், வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும். . செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள், படிப்பில் கவனம் அதிகரிக்கும், புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், தொழில் சம்பந்தமான படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உறவினர்களிடையே நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தங்க நகைகள் வாங்குவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் தகராறு உண்டாகும், அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்து கிடைக்கும், பரம்பரையாக செய்துவந்த தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, வீடு மாறும் நிலை ஏற்படும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரம் விருத்தியடையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பு செலவுகள் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு கரையும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் சிறப்பு உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும்.. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், பண வருமானத்தில் தாமதம் உண்டாகும்.. ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. . கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

தனுசு

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு செய்ய வேண்டாம், செயல்களில் கவனம் தேவை. செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும், வீட்டு வாடகை மூலம் வருமானம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருள் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகமாக இருக்கும், பண வரவும் சரளமாக இருக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தின் மொத்த வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும், அடிக்கடி நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும்.. குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் வெற்றியடையும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 16ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், தொழில் காரணமாக வெளியூருக்கு செல்வீர்கள்.. ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் லேசான தடுமாற்றம் ஏற்படும்.

கும்பம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் புதிய வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை, வெளியூர் பயணம் நன்மையைத் தரும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், கடவுள் அனுக்கிரகம் துணை இருக்கும்.. சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 16ம் தேதிக்கு பின்னர் ஆடை ஆபரணங்களை கவனமாக கையாளவும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், மனதின் எண்ணங்கள் நிறைவேறும்.. ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் தொல்லை நீங்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவினால் ஆதாயம் உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுக்கு உதவுவீர்கள், வீட்டு வாடகை மூலம் வருமானம் கிடைக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும், பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உண்டாகும், 16ம் தேதிக்கு பின்னர் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit