கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை… மீண்டும் பரபரப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது போல, ஜார்கண்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாவீர் மஹேஷ்வரி (70), என்பவரின் மனைவி கிரண் (65). தம்பதிக்கு நரேஷ் அகர்வால் (40) என்ற மகனும் ப்ரீத்தி (38) என்ற மருமகளும் இருந்தனர்.

நரேஷ் – ப்ரீத்திக்கு ஆமன் (8) மற்றும் அஞ்சலி (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆறு பேரும் தங்கள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆறு பேரின் சடலங்களை கைப்பற்றியதோடு அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், மொத்த குடும்பமும் பெரும் கடனில் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

மேலும், ஒருவரை தூக்கில் இட முடியவில்லை, அதனால் கொன்றுவிட்டோம் என எழுதப்பட்டிருந்தது.

மஹாவீர் குடும்பம் சொந்தமாக உலர்ந்த பழக்கடை வைத்திருந்ததாக கூறியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

new_dead

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*