பரிதாபமாக உயிரிழந்த தாயும் மகளும்… குருனாகலையில் சம்பவம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Dead-Body

குருணாகலை – சுபசெதகம மகா ஓயாவில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதை தொடர்ந்து , காவற்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

40 வயதுடைய பெண் மற்றும் அவரின் 10 வயது பெண் பிள்ளை ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக கொபெய்கனே பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் நிகவரெடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit