கொடிய நோயினால் 16 வயது மாணவி பலி… மன்னாரில் பரபரப்பு

பிறப்பு : - இறப்பு :

டெங்கு நோய் காரணமாக 16 வயது மாணவி ஒருவர் மன்னார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மன்னார் மருத்துவமனையின் பணிப்பாளர் எமது செய்திப் பிரிவிடம் இதனை உறுதிப்படுத்தினார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியே உயிரிழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, டெங்கு நோய் காரணமாக 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, குறித்த மாணவியின் மரணத்தில் தமது தரப்பில் ஏதேனும் தவறுகள் நேர்ந்துள்ளதா? என்பது குறித்து ஆராயுமாறு மருத்துவமனை பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit