கோயம்புத்தூர் மாணவி துடி துடித்து இறந்த பரிதாபம்… பயிற்சியாளர் குறித்து வெளியான தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கோயம்புத்தூர் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2வது மாடியிலிருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் லோகேஸ்வரி தலையில் அடிபட்டு இறந்து போனார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சி அளித்தவர் தங்களது வாரியத்தை சேர்ந்தவரில்லை என்றும், மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த ஆறுமுகம்?

Arumugam NDMA என்ற பேஸ்புக் பக்கத்தில், கடந்த 2011ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் பயிற்சியாளராக சேர்ந்ததாகவும், தற்போது வரை அந்த பணியை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு கல்லூரிகளில் பயிற்சி கொடுப்பது போன்ற புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதலில் ஆறுமுகத்தின் சார்பில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது, அதில் மத்திய அரசின் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சியானது அனைத்து கல்லூரிகளுக்கு வழங்கப்படுவதாகவும், தங்கள் கல்லூரியிலும் இதனை செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

கல்லூரிகள் இதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆறுமுகம், அங்கு சென்று பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசுவாராம்.

2015, 2016ம் ஆண்டுகளில் தனியார் கல்லூரிகளில் ஆறுமுகம் இவ்வாறு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

எனினும் கருத்தரங்களில் பேசுவது போன்ற புகைப்படங்கள் உள்ளதே தவிர, வகுப்பறைக்கு வெளியே பயிற்சி கொடுப்பது போன்ற புகைப்படங்கள் ஏதுமில்லை, இதுதொடர்பில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*