நேற்றைய தினம் யாழில் அரங்கேறிய பயங்கரச் சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முகத்தை மறைத்துக்கொண்டு சென்ற நால்வரினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார மற்றும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தற்போதும் அங்கு தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit