அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை… மனோகணேசன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடக்கு, கிழக்கு மக்களின் வீடு என்ற கனவு நனவாகவில்லை எனவும் இந்தியா அரசும் இராணுவமும் இணைந்து வீடுகளை வழங்கியதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு வீட்டை கூட வழங்கவில்லை. இதனால் மக்கள் அரசாங்கம் மீது அதிருப்தியடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதேச ஊடகவியலாளர்களுடன் அரசமொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு அதிகாரம் இருக்குமாயின் மூன்று மொழிகளையும் கட்டாயமாக்கி இருப்பேன்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகளை கட்டி தருவதாக அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

எனினும் அரசாங்கம் ஒரு வீட்டை கூட நிர்மாணிக்கவில்லை. இந்திய அரசாங்கம் 45 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளது. இராணுவத்தினரும் முன்வந்து பல வீடுகளை மக்களுக்காக கட்டி கொடுத்துள்ளனர்.

ஒரு லட்சம் வீடுகளில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு அமைச்சர் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டை நிர்மாணிக்க அவர் ஒரு கல்லைக் கூட வைக்கவில்லை.

மேலும் 50 ஆயிரம் வீடுகள் ஜனாதிபதியின் அமைச்சுக்குள் சிக்கியிருக்கின்றது. அந்த 50 ஆயிரம் வீடுகளை எனது அமைச்சுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும் அந்த வாக்குறுதியுடன் இன்னும் பிரதமர் அலுவலகத்தில் சிக்கியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் நடந்துள்ள உண்மையை ஊடகங்களிடம் வெளியிடுவேன்.

அமைச்சர் சுவாமிநாதனை வடக்கு, கிழக்கு மக்கள் திட்டுகின்றனர். மக்களிடம் திட்டுவாங்க நான் விரும்பவில்லை.

முன்னாள் ராஜாங்க அமைசச்ர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை நான் ஏற்கவில்லை. அவரது கருத்தை விமர்சிப்போர் வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தவறியுள்ளனர்.

அரசாங்கத்தை ஆட்சி அமர்த்தவும் அமைச்சு பதவிகளை பெறவும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஜனாதிபதியையும் பிரதமரை ஆட்சிக்கு கொண்டு வர வடக்கு, கிழக்கு மக்கள் பங்களிப்பை வழங்கினர்.

எனினும் அந்த மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*