சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே இப்படி ஒரு ”சுருங்கும் தீவு” இருக்குது தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

island

இந்தியாவில் எத்தனை தீவு இருக்கிறது என்றால் உடனே லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவு என்று சிலவற்றை நம்மால் கூகுளிடாமல் அடுத்த நொடியே சொல்லிவிடமுடியும். ஆனால் இந்த தீவுகளுக்கு செல்ல சற்று சிரமப்படவேண்டும் அல்லது நேரச் செலவோ, பொருட்செலவோ சற்று அதிகம். அதற்கேற்ப உல்லாசமும், அனுபவமும் சிறந்து இருக்கும். ஆனால் நினைத்தமாத்திரத்திலேயே நாம் ஒரு தீவுக்கு செல்லவேண்டும் என்றால், முடியுமா? ஏன் முடியாது. வாங்க இப்பவே போகலாம் இந்த தீவுக்கு.

வழி : 1. சென்னையிலிருந்து – தூத்துக்குடி
2. கோவையிலிருந்து – தூத்துக்குடி

தமிழகத்தின் இருவேறு துருவங்களிலிருந்தும் இந்த தீவுக்கு செல்லவிரும்புபவர்களுக்காக இரண்டு வழிகளிலும் உங்களுக்கு நேட்டிவ் பிளானட் தமிழ் வழிகாட்டியாக விரும்புகிறது.

போர் என்றவுடன் ஏதோ என்று பதறிவிடவேண்டாம். இப்போது எதற்கெடுத்தாலும் போர்.. ஆமாம் போர் என்றபடி சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் செய்கிறார்கள். அந்த சொல்லிலேயே இந்த பயணத்தை போர் என்போம். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து வழிகளை முடிவு செய்துகொள்ளுங்கள். வாருங்கள் புறப்படுவோம்.

சென்னையிலிருந்து புறப்படுகிறவர்கள் கார், பைக், பேருந்து என எந்த வாகனத்தில் புறப்பட்டாலும் முதலில் தூத்துக்குடி வந்தடைய வேண்டும். அதற்கு ஏற்ற சிறந்த பாதையை டிராபிக் குறைவான, டோல்கேட்டுகள் குறைவான பாதையை தேர்ந்தெடுத்தல் நலம். அப்படி சென்னை – தூத்துக்குடி மார்க்கத்திற்கு மூன்று பாதைகள் உள்ளன.

island

சென்னை – செங்கல்பட்டு – மேல்மருவத்தூர் – திண்டிவனம் -விழுப்புரம் – திருச்சி – மதுரை வழியாக தூத்துக்குடியை அடையலாம். இந்த பாதையில் மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக பயணிக்கவேண்டும். இது சற்று எளிமையான பாதையாக இருப்பினும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறது. என்பதால் கூடுதல் பாதையாக மற்றொரு வழியும் உள்ளது.

இது மாற்றுப்பாதையாகக் கொள்வது நல்லது. இடையில் சில டோல்கேட்கள் தவிர்க்கமுடியும் என்றாலும் சற்று அதிக தூரம் எடுக்கும் பாதை இதுவாகும். உளூந்தூர்பேட்டையிலிருந்து பிரியும் சாலை இளவனாசூர் – கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சேலம் , நாமக்கல், கரூர் , திண்டுக்கல் வழியாக மதுரையை அடைகிறது. பின் அங்கிருந்து மேற்கூறிய வழியில் பயணிக்கலாம்.

இது பொதுவாக கூகுள் உள்ளிட்ட எந்த வழிகாட்டியிலும் இல்லாத பாதையாகும். இது அதிக தொலைவாக கருதப்பட்டாலும், சிறந்த பொழுதுபோக்குகள் நிறைந்த பாதை. வெறுமனே சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருவது போர் என்பவர்கள் இந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். கிழக்கு கடற்கரையோரமாக சாலையில் பயணித்தல் யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள்.

சென்னை – பாண்டிச்சேரி – வேளாங்கன்னி – திருத்துறைப்பூண்டி – அதிராம்பட்டினம் – ஜமாலியா – காட்டுமாவடி – அம்மாப்பட்டணம் – தொண்டி – தேவிப்பட்டினம் – ராமநாதபுரம் – கீழக்கரை – வைப்பாறு – வளச்சமுத்திரம் வழியாக தூத்துக்குடியை அடையலாம். மற்ற இருபாதைகளும் பெரிய சுவாரசியமானதாக இல்லாததால் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்து சுற்றுலாவைத் தொடர்வோம். ஒருவேளை அந்த பாதைகளில் பயணிப்பவர்களென்றால் கவலையின்றி மேற்சொன்ன வழிகளில் பயணிக்கலாம்.

சென்னையிலிருந்து நம் பயணத்தைத் தொடங்கும் முன் அந்த மாநகரத்தின் சில சிறப்புக்களை தெரிந்துகொள்வோம். இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு கொண்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit