மனைவியை கொடூரமாகக் கொலை செய்த கணவன்… தானும் தற்கொலைக்கு முயற்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

murder

கெகிராவை கயிலபொதான பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக வௌிநாட்டில் இருந்துள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொலை சம்பவம் அவரின் கணவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் , சந்தேகநபர் கடுமையான வெட்டுக்காயங்களுடன் கெகிராவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்த பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதால் கெகிராவை மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கெகிராவை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit