மரண தண்டனைக்கு முதல் நாள் என்ன நடக்கும் தெரியுமா? கைதிகள் அளித்த திகைக்க வைக்கும் வாக்குமூலங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

marana

குற்றங்கள் எல்லா நேரத்திலும் திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. பெரும்பாலான பெரும் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம், கோபம், சூழ்நிலை, நன்றி, விசுவாசம் என பல காரணங்களால் தான் ஏற்படுகின்றன.

முக்கியமாக கொலை குற்றங்கள் என்று காணும் போது, கூலிக்காக செய்த கொலைகளை தவிர்த்து… சொந்த காரணங்களால் செய்யப்பட்ட கொலைகள் யாவும் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டும், ஆத்திரத்தின் காரணத்தாலும் தான் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.

பல்வேறு குற்றங்கள் புரிந்த காரணத்தால் மரண தண்டனை பெற்ற உலகின் பல நாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் தங்கள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தைகள்….

விடிந்தால் மரண தண்டனை… கடைசி உணவை உண்டாயிற்று… படுக்கைக்கு செல்லும் முன்… பண்ண எல்லாம் குற்றத்துக்கும் நான் வருத்தப்படுறேன். ரொம்ப, ரொம்ப, ரொம்ப… வருத்தபடுறேன். என்ன மன்னிச்சிடுங்க. பலமுறை எனக்கு மன்னிப்பு கிடைக்குமான்னு நான் ஏங்கி இருக்கேன். ஆனா, மன்னிப்பு கேட்கிறத தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தெரியல.

குற்றம்: ஒரு நபரை சுட்டு கொன்றது. தண்டனை விதிக்கப்பட்டே அதே ஆண்டில் இவருக்கு மரண தண்டனை நாளும் குறிக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட கடைசி உணவை எதுவும் பேசாமல், மௌனமாக உண்டார். மறுநாள் காலை மரண தண்டனை நிறைவேற இருக்கிறது, ஏதாவது கடைசியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறாயா என்று சிறை காலவர்கள் கேட்கிறார்கள்.

நோ சார்… இது மட்டுமே இந்த கைதியிடம் இருந்து அந்நாளில் வெளிப்பட்ட ஒரே பதில்.

குற்றம்: மூன்று கொலை செய்தது.

2001ம் ஆண்டு இந்த கைதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது….

என்னை ஒரு சிறந்த இடத்திற்கு அனுப்பவிருக்கிறீர்கள். எனக்கு இந்த முடிவு ஓகே தான். ஒருவரின் வாழ்வும், சாவும் அவர் எடுக்கும் முடிவில் தான் தீர்மானம் ஆகிறது. என் சாவை நானே தேர்வு செய்திருக்கிறேன்.
குற்றம்: கொலை!

1992ம் ஆண்டு 23 வயது நிரம்பிய ஒரு இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த காரணத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.

மறுநாள் மரண தண்டனை குறிக்கப்பட்டிருந்தது… காலை உணவை சாப்பிட வில்லை. அவரது கண்கள் ஈரமாகவே இருந்தது. தனது கடைசி உணவாக அவர் கேட்டது ஒரு கோப்பை பழரசம்.

மரண தண்டனை நிறைவேற்றும் முன் தன் சிறை நண்பர்களிடம், “இந்த தருணத்தில் நான் அனைவரையும் நெருக்கமாக உணர்கிறேன். நான் மீண்டும் உங்கள் அனைவரையும் காண்பேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்.” என்று கூறி சென்றார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதானவர். இவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருசிலர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர்.

கடைசியாக கொஞ்சம் வெறும் வெள்ளை சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு மரண தண்டனைக்காக தயாரானார் இந்த கைதி. ஏதாவது பேச / கூற விருப்பம் இருக்கிறதா என்றதற்கு… இல்லை… நான் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறி நகர்ந்துவிட்டார்.

இவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய போது வயது 72 இருக்கும். அந்த சிறையில் மிகவும் வயதான நிலையில் மரண தண்டனை பெற்றவர் இவராக தான் இருக்கும் என்று பிற சிறை கைதிகள் பேசிக் கொண்டனர்.

தனக்கு அளிக்கப்பட கடைசி விருப்ப உணவு சலுகையை கூட இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் அளிக்கப்பட்ட அதே சாதமும், காய்கறிகளையும் இவரும் எடுத்துக் கொண்டார். இவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. மௌனமே இவரது கடைசி வாக்குமூலமாக பதிவானது.

இவர் செய்த குற்றம்… கொள்ளையடிக்க சென்ற இடத்தில், தடுக்க வந்த கடை மேலாளரை கொலை செய்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit