வட மாகாண கற்பித்தல் நடவடிக்கைகளில் விரைவில் பல மாற்றங்கள்

பிறப்பு : - இறப்பு :

wiky

வடமாகாண பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வடமாகாண கல்வித் திணைக்கள பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்கால மாணவ மாணவியர்கள் தமது கல்வி அறிவுகளை பிரத்தியேகக் கல்வி நிலையங்களிலேயே பெற்றுக்கொள்கின்றார்கள்.
பாடசாலைகளில் முறையாக போதிக்கப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு அண்மைக் காலமாக மேலெழுந்துள்ளது.
மூன்று வயது குழந்தையைக்கூட முன்பள்ளி ஆசிரியர்களிடம் மேலதிக வகுப்புகளுக்காக பெற்றோர்கள் கூட்டிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் தமது பெற்றோரிடம் பல்வேறு விடயங்களை எதிர்ப்பார்க்கின்றது.
எனவே, அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதற்கு ஏற்றவாறு பெற்றோர்களும் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகள், கல்வி சம்பந்தமாக தமது பெயர்களை உயர்த்துவதை மட்டும் கருத்திற்கொள்ளாது  மாணவ மாணவியரின் நலன் சார்ந்து செயற்பட முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் மாணவர்களுக்கு இன்னும் அதிகமான பயிற்சிகள்  வழங்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பில் அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றபோது வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகள் தேசியத் தரம் வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit