இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

petrol

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  137 ரூபாவாக காணப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 6ம் திகதி எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் , பின்னர் அதனை அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit