பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை… இராணுவ வீரர் கைது

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

army_arrest

வவுனியாவில் பாடசாலை சிறுமிக்கு தொல்லைக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊ டாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பஸ்ஸில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார்.

இதன்போது அதே பஸ்ஸில் பயணம் செய்த இராணுவ வீரர் ஒருவர் குறித்த மாணவியை அணுகி தொலைபேசி இலக்கத்தினை கேட்டதுடன் தொல்லை செய்துள்ளார். இதை அவதானித்த பயணி ஒருவர் குருமன்காட்டிலுள்ள பொலிஸ் காவல் அரணில் பஸ்ஸை நிறுத்துமாறு சாரதியிடம் தெரிவித்துள்ளார்.

பஸ்ஸை நிறுத்தியதும் இராணுவச்சிப்பாய் பஸ்ஸில் இறங்கி தப்பி ஓடியபோது பஸ்ஸின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் அவரை பொலிசார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்களால் அப்பகுதி சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது 30 நிமிடங்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தியதுடன் பயணிகளுடன் குறித்த பஸ்ஸை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பாடசாலைச்சீருடையுடன் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். பஸ் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit